Thursday, 6 March 2014

என்ன தவம் செய்தனை Song Lyrics


 பாடல்: என்ன தவம் செய்தனை
வா¢கள்: பாபநாசம் சிவன்
ராகம்: காபி
தாளம்: ஆதி


என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட

(என்ன தவம்)

சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற

(என்ன தவம்)

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே

(என்ன தவம்)

No comments:

Post a Comment