Monday, 14 April 2014

வாழ்க்கை படகு அத்தியாயம் 6

ஹாய் friends,

வாழ்க்கை படகு அத்தியாயம் 6

http://www.calameo.com/read/003257157b10ebe3a1adb

https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaidTdpQ0VYTjhjT28/edit?usp=sharing


படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்

இப்படிக்கு,
நிரல்யா

Saturday, 12 April 2014

வாழ்க்கை படகு அத்தியாயம் 5


ஹாய் friends,

வாழ்க்கை படகு அத்தியாயம் 5

http://www.calameo.com/read/00325715770c267df0e5d

https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiNWVDZU1Ick5oWWM/edit?usp=sharing


படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்

இப்படிக்கு,
நிரல்யா

Monday, 31 March 2014

வாழ்க்கை படகு அத்தியாயம் 4


ஹாய் friends,

வாழ்க்கை படகு அத்தியாயம் 4


http://www.calameo.com/read/0032571576547d6a80531

https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiekFKYkhrc0pYNzA/edit?usp=sharing


படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்

இப்படிக்கு,
நிரல்யா

Saturday, 22 March 2014

வாழ்க்கை படகு அத்தியாயம் 3



ஹாய் friends,

 வாழ்க்கை படகு அத்தியாயம் 3

http://www.calameo.com/read/00325715746d44bdc1de6

https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiUUhPTmdhLVBhYlk/edit?usp=sharing

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்

இப்படிக்கு,
நிரல்யா

Thursday, 13 March 2014

வாழ்க்கை படகு அத்தியாயம் 2


ஹாய் friends,

 வாழ்க்கை படகு அத்தியாயம் 2

http://www.calameo.com/read/0032571572c82e45b0664

https://drive.google.com/file/d/0B-5...it?usp=sharing

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்

இப்படிக்கு,
நிரல்யா

Saturday, 8 March 2014

வாழ்க்கை படகு அத்தியாயம் 1


ஹாய் friends,

 வாழ்க்கை படகு அத்தியாயம் 1

https://drive.google.com/file/d/0B-5S2KNFZDaiT2FRcUR6SlZldVU/edit?usp=sharing




படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்

இப்படிக்கு,
நிரல்யா

Friday, 7 March 2014

"வாழ்க்கை படகு"- முன்னுரை

ஹாய் தோழிகளே/தோழர்களே,

அனைவருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

நான் நிரல்யா ITல் வேலை பார்க்கும் இந்த காலத்து யுவதி.

என்னுடைய முதல் கதை "வாழ்க்கை படகு" ஒரு செம காதல் கல்யாணக் கதை.

இந்த கதையை மகளிர் தினத்தில் ஆராம்பிக்குறது ரொம்ப பெருமையாவும் சந்தோசமாவும் இருக்கு.

ஹீரோயின் பேரு : பார்வதி அருளானந்தன்
ஹீரோ பேரு: பெர்னாண்டோ சன்சோ

என்னது "பெர்னாண்டோ சன்சோ வா நம்ம ஊரு பையன் மாதிரி தெரியலையே!!!" - கரெக்டா கண்டுபிடிச்சிட்டிங்க போங்க.......

நம்ம ஊரு கதாநாயகிக்கும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கதாநாயகனுக்கும் நடக்கும் காதல் கதை.

ஹீரோ ரொம்ப நல்லவருங்க, எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, பார்க்க அழகன் போங்க, கட்டுமஸ்தான உடம்பு பின்னே, உள்ளூர் football டீம்ல விளையாடுரான்னா பாத்துகோங்க,

ஹீரோயின் அக்மார்க் தமிழ் பொண்ணு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று தமிழ் பொண்ணுக்காண எல்லா குணநலன்களோடு இருப்பா.

கொஞ்சம் கனமான கதை ஆனா முடிந்தவரை இயல்பாய் சொல்ல முயற்சி செய்றேன்.

இப்படிக்கு,
நிரல்யா

தாயே யசோதா Song Lyrics


பாடல்: தாயே யசோதா உந்தன்
வா¢கள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: தோடி
தாளம்:

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
(தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
(தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னைபாலனென்று தாவி அணைத்தேன் - அடி யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகவாகுதடி

(தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான்
பநதளவாகினும் வெண்ணை தந்தால்தான் விடுவேனென்று
முந்தானையைத் தொட்டிழுத்து போராடினான்
அந்த வாசுதேவன் இவன்தான் - அடி யசோதா
அந்த வாசுதேவன் இவன்தான்
மைன்தனென்று இழுத்தணைத்து மடிமேல் வைத்து
சுந்தரமுகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய்திறந்து
இந்திர ஜாலம் போலவே ஈரேழுலகம் காண்பித்தான்

(தாயே)

Thursday, 6 March 2014

உள்ளத்தை உருக வைக்கும், மனதை நெகிழச் செய்யும் முருகன் பாடல்


உள்ளத்தை உருக வைக்கும், மனதை நெகிழச் செய்யும் முருகன் பாடல்



என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா… (என்ன கவி பாடினாலும்)


அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (என்ன கவி பாடினாலும்)


அக்ஷரலக்ஷம் தந்த
அண்ணல் போஜ ராஜன் இல்லை
பக்ஷமுடனே அழைத்து
பரிசளிக்க யாரும் இல்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை
இக்கணத்தில் நீ அன்றி எனக்கோர் குறையுமில்லை


லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை
(அ) லக்ஷியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை


என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா…

என்ன கவி பாடினாலும் பாடினாலும்….

Vishamakaara Kannan - விஷமக்கார கண்ணன்



ராகம்: செஞ்சுருட்டி    

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


விஷமக்கார கண்ணன் பொல்லாத விஷமக்கார கண்ணன் 
பொல்லாத விஷமக்கார கண்ணன் 

வேடிக்கையாய் பாட்டுப்பாடி விதவிதமாய் ஆட்டமாடி 
நாழிக்கொரு லீலை செய்யும் நந்தகோபல க்ருஷ்ணன்  ||

வேண்ணை பானை மூடக்கொடது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது 
இவன் அம்மா கிட்ட சொல்லக்கூடாது 
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது 
இவனை சும்மா ஒரு பேச்சுக்காணும் திருடனென்று சொல்லிவிட்டால் 
அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடன் என்பான் ||

நீலமேகம் போலே இருப்பன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடி இருப்பன் 
கோலப்புள்ளங்குழல் ஊதி கோபிகளை கள்ளம்மாடி
கொஞ்சம்புற வெண்ணை தாடி என்றுகேட்டு ஆட்டம்மாடும்  ||

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை அழைப்பான் (கண்ணன்)
மூக்காரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான் 
எனக்கது  தெரியாதென்றால் நெக்குருக கிள்ளிவிட்டு
விக்கி விக்கி அழும்போது இது தாண்டி மூக்காரி என்பான் ||

என்ன தவம் செய்தனை Song Lyrics


 பாடல்: என்ன தவம் செய்தனை
வா¢கள்: பாபநாசம் சிவன்
ராகம்: காபி
தாளம்: ஆதி


என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க

(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட

(என்ன தவம்)

சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற

(என்ன தவம்)

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே

(என்ன தவம்)

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா Song Lyrics


பாடல்: குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வா¢கள்: ராஜாஜி
ராகம்: ராகமாலிகா
தாளம்:


[சிவரஞ்சனி]
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா

(குறை)

கண்ணுக்குத் தொ¢யாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தொ¢யாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

[காபி]
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் எனக்கொன்றும் குறையில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்ரும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

[சிந்து பைரவி]
கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

அலைபாயுதே கண்ணா Song Lyrics


 பாடல்: அலைபாயுதே கண்ணா
வா¢கள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம்: கானடா
தாளம்:


அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எ¡¢யுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு கொடுத்து மகிழ்த்தவா
உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுடு தோன்றிடும் குறைகள் போலவே மனதில்
வேதனை மிகவுற

(அலைபாயுதே)

தாலாட்டு


கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

யாரடித்து நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!


மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் பொறுத்து, சண்முகனே கண் வளராய்!
(சாமி, மனம் பொறுத்து, அம்பிகையே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

தமையன் அடித்தானோ, உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகனே!
(நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் பூமகளே!)


அக்காள் அடித்தாளோ, உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண் வளராய்!
(விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாலும்
எங்கள் ஆரமுதே கண்வளராய்!


அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க துரையே நீ கண் வளராய்!
(அழாதே ,அழாதே! எங்கள் அரசி நீ
தொழுவார் பலர் இருக்க தூயவளே நீ கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

(அடைப்புக் குறியில் இருப்பவை, பெண் குழந்தைக்கான மாற்றங்கள்!)

Oats Vada-Recipe

Here is the recipe of it:

Oats: 1 cup
Gram dal: 1 cup
Cummin seeds: 1 tsp
Curry leaves: 1/2 cup
Onions: 1
Chilly: depends on taste
Asafoetida: 1/2 tsp
Coriander leaves: 1/4 cup
Salt to taste
Oil-2-3 cups

Soak gram dal in water for an hour, filter the water and finelly grind the gram dal.
Soak oats in water for five minutes, filter the water and mix oats with grounded gram dal.
Add all the incredients to mixer except Oil and make small balls.
Keep the pan in stove (low flame) pour sifficient oil for deep frying.
Put the balls in oil and deep fry it...

Delicious oats vada ready...!!!!!!!!!!! yummy.....